http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





பொம்மலாட்டம்

நடிப்பு
நானா படேகர், அர்ஜுன், காஜல் அகர்வால், ரஞ்சிதா, ராகினி, மணிவண்ணன், விவேக்

ஒளிப்பதிவு
பி. கண்ணன்

கலை
சாபு சிரில்

இசை
ஹிமேஷ் ரேஷ்மயா

இயக்கம்
பாரதிராஜா

தயாரிப்பு
தெற்கத்தி கலை கூடம்

     மண்வாசனைக் கதைகளாக இருந்தாலும் சரி, இருக்கை நுனிக்குத் தள்ளி நகம் கடிக்க வைக்கும் திகில் கதைகளானாலும் சரி... தான் எப்போதும் அதில் 'மாஸ்டர்'தான் என்பதை 'நம்ம மண்ணின் மைந்தன்' பாரதிராஜா மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் பொம்மலாட்டம் மூலம்.

     நிஜமாகவே வித்தியாசமான கதை, எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட திரைக்கதை பொம்மலாட்டம். கனவுத் தொழிற்சாலையில் ஆரம்பிக்கிறது கதை.

     ராணா ஒரு மதிப்புக்குரிய இயக்குநர். தன் மனதுக்குச் சரியானதை, தயக்கமின்றி செய்யும் துணிச்சல்காரர். எதுவும் ஒரு ஒழுங்கான கட்டமைப்புக்குள் இயங்க வேண்டும் என எதிர்பார்க்கிற பர்ஃபெக்ஷனிஸ்ட். அதற்கு நேரெதிரான மனைவி, அதனால் கசந்த வாழ்க்கை...

     இன்னொரு பக்கம் அவர் புதிதாக எடுக்கும் படத்தின் நாயகி, மினரல் வாட்டர் இல்லாவிட்டால் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என அடம்பிடிக்க, பேக்கப் சொல்லிவிட்டு, நல்ல நாயகியைத் தேடிப் போகிறார்.

     அப்போது கண்ணில் படுகிறார் திருஷ்ணா. வில்லாய் நெளியும் உடல், சொன்னதை கற்பூரமாய் செய்யும் லாவகம் என ராணா எதிர்பாத்த அதே பெண்... மீண்டும் படப்பிடிப்பு துவங்குகிறது. ஆனால் மீடியா உள்பட யாருக்கும் நாயகியின் முகத்தைக் காட்ட மறுக்கிறார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறார்.

     ஆனால் அடுத்தடுத்து மூன்று கொலைகள். அந்தப் பெண்ணை மீடியா முன் அழைத்துவர நினைக்கும் ராணா, பின்னர் காரோடு அந்தப் பெண்ணை மலையிலிருந்து உருட்டித் தள்ளிக் கொல்கிறார்.

     இந்தக் கொலைகளின் பின்னணி என்ன... ராணாதான் கொலைகாரரா... போன்ற கேள்விகளுக்கு திடுக் திடுக் முடிச்சுகளை அவிழ்த்து விடை கூறுகிறார் சிபிஐ அதிகாரி விவேக் வர்மா. மீதி... விரிவாக காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வெள்ளித் திரையில் பாருங்க!

     ராணாவாக வரும் நானா படேகருக்கு, மறுயோசனையின்றி இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதினைத் தரலாம். இந்த மாதிரி 'க்ளாஸ்' நடிப்பை வேறு எந்த நடிகரிடமும் எதிர்பார்க்கவே முடியாது. வீட்டில் உள்ள ஒழுங்கீனங்களைக் கண்டு குமுறும் குடும்பத் தலைவனாக, செட்டில் நடிகைக்கு லாவகமாக காதல் பாடம் சொல்லித் தரும் இயக்குநராக, கொலை முடிச்சுகளில் சிக்கி நிம்மதி இழந்து தவிக்கும் குற்றவாளியாக... மனித நேயம் பொங்கும் நல்ல மனிதராக... இணையற்ற நடிப்பு! ஹாட்ஸ் ஆப் நானா!

     அர்ஜூன் இதில் நடிக்கவில்லை... நிஜமான சிபிஐ அதிகாரியாகவே வருகிறார். அலட்டிக் கொள்ளாத அசத்தல் நடிப்பு.

     திருஷ்ணாவாக வரும் ருக்மணி விஜயகுமார் ஒரு இனிய அதிர்ச்சி. அழகான உடல்மொழி, அர்த்தமுள்ள நடிப்பால் மனதில் பதிகிறார்.

     இந்த க்ளைமாக்ஸை யூகிப்பவர்களுக்கு பரிசுப் போட்டியே வைத்திருக்கலாம். அத்தனை மர்மம் நிறைந்த அழுத்தமான க்ளைமாக்ஸ். இந்த முடிவுக்குள் ஒரு மிகப் பெரிய சமூக செய்தியைச் சொன்ன இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

     கண்ணனின் காமிராவும் மாண்டியின் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் ப்ளஸ்கள்.

     சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் அவற்றை பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கத் தேவையில்ல. நம் அபிமான இயக்குநர் மீண்டும் ஒரு நல்ல படத்தோடு வரும்போது, எழுந்து நின்று கைதட்டி உற்சாகத்துடன் அவருக்கு உற்சாகமளிப்பதுதான் ஒரு நல்ல விமர்சனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

     சஸ்பென்ஸ் த்ரில்லர்களுக்கு சிவப்பு ரோஜாக்களையும், கைதியின் டைரியையும்தான் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள். இனி இவர்கள் பட்டியலில் பொம்மலாட்டம் முதலிடம் பிடிக்கும்!



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/bommalattam.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs