http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





ஏகன்

நடிப்பு
அஜித், நயன்தாரா, நவ்தீப், சுஹாசினி, ஜெயராம், சுமன், நாசர், பாஸ்கர்

ஒளிப்பதிவு
அர்ஜுன்

இசை
யுவன் சங்கர் ராஜா

இயக்கம்
ராஜு சுந்தரம்

தயாரிப்பு
ஐயங்கரன் இண்டர்நேஷனல்

     ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த 'மே ஹூன் நா' என்ற படத்தை தமிழில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜு சுந்தரம்.

     'ஏகன்' என்றால் சிவபெருமான். 'ஏகன்' என்றால் ஒற்றை ஆள். சிவனைப் போல ஒற்றை ஆளாக நின்று, சத்ருக்களை சம்ஹாரம் செய்யும் வேடத்தில் அஜீத். திறமை வாய்ந்த போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜீத். ஹாங்காங்கில் ஒரு பெரிய தாதாவிற்கு முடிவு கட்டும் அஜித் பின்னர் இந்தியா வருகிறார்.

     இந்தியாவில் வில்லன் சுமனிடம் கூட்டாளியாக இருக்கும் தேவன் ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து விலகி அப்ரூவராக மாற முடிவெடுக்கிறார். இதையறிந்த சுமன் தேவனை கொலை செய்ய முயல்கிறார். சுமனிடமிருந்து தப்ப தலைமறைவாகிறார். ஒரு புறம் சுமனும் மறுபுறம் போலீஸும் தேவனை துரத்துகிறார்கள்.

     இதற்கிடையே தேவனின் மகள் பியா ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிப்பது போலீஸுக்கு தெரிய வருகிறது. போலீஸ் தேவனைப் பற்றி அறிந்து கொள்ள பியாவுடன் நெருங்கிப் பழக அஜீத்தை அனுப்புகிறது. கல்லூரியில் மாணவராக நுழைகிறார் அஜீத். அவ்வப்போது எதிரிகளிடமிருந்து பியாவைக் காப்பாற்றுகிறார்.

     கல்லூரி ஆசிரியராக நயன்தாரா. அஜித்க்கு நயன் தாரா மேல் காதல் வருகிறது. அதே போல் நவ்தீப்பும் பியாவும் காதலிக்கிறார்கள். கதையில் திடீர் திருப்பமாக நவ்தீப் அஜித்தின் சகோதரன் என்ற உண்மை தெரிகிறது. வளர்ப்பு அம்மா, தம்பி, அப்பா என்று செண்டிமெண்ட் குழப்பம், தம்பி நவ்தீப், பியாவின் காதல் என்று அவர்களும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்கள்.

     இறுதியில் அஜித் தேவனைக் கண்டுபிடித்து வில்லன் சுமனை என்ன செய்கிறார் என்பதே கதை.

     அஜித் தனக்கு காமெடி நன்றாக வரும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். ராஜு சுந்தரம் உபயத்தில் நடனத்திலும் புது அவதாரம் எடுத்துள்ளார் அஜித். சண்டைக்காட்சிகளில் வழக்கம் போல் சுறுசுறுப்பு காட்டியுள்ளார்.

     நயன் தாரா பில்லாவைத் தொடர்ந்து இந்தப் படத்தில் கவர்ச்சி காட்டியுள்ளார். நடிப்பு அவசியமில்லாத பாத்திரம் என்பதால் கவர்ச்சி மட்டும் காட்டினால் போதும் என்று திருப்தியடைந்து விட்டார் போலிருக்கிறது.

     நாசர், சுஹாசினி, ஹனிபா ஆகியோர் தமது பாத்திரத்தை திறம்பட நடித்துள்ளார்கள். சுமன் பாத்திரத்தை வீணடித்திருக்கிறார்கள்.

     கல்லூ‌ரி முதல்வர் ஜெயராமும் சத்யனும் சேர்ந்து நடத்தும் நகைச்சுவைக் காட்சிகள் அருமை. அவர்களுடன் அஜித்தும் ஜுனியர் ஹனிஃபாவும் சேர்ந்து மேலும் சிரிக்க வைக்கிறார்கள்.

     யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒரு சில பாடல்கள் அருமை. பின்னணி இசை அருமை என்று சொல்வதற்கில்லை. அர்ஜுனின் ஒளிப்பதிவு மனதைத் தொடுகிறது.

     ராஜு சுந்தரத்துக்கு இது இயக்குனராக முதல் படம். படத்தை ஒரளவுக்கு விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தாலும், பாத்திரப் படைப்பில் கோட்டை விட்டுள்ளார் என்றே கூற வேண்டும். இருந்தாலும், படத்தை அஜீத்தின் நடிப்பும், நகைச்சுவைக் காட்சிகளும் தூக்கி நிறுத்துகின்றன.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2008/aegan.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs