http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





வேல்

நடிப்பு
சூர்யா, அசின், வடிவேலு, கலாபவன்மணி, லட்சுமி, நாசர், சரண்யா, ராஜ்கபூர், சார்லி

இசை
யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு
பிரியன்

இயக்கம்
ஹரி

தயாரிப்பு
மோகன் நடராஜன் - ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ்

     சரண்ராஜ் - சரண்யா தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள். ரயிலில் செல்லும்போது ஒரு குழந்தை காணாமல் போய்விடுகிறது. சரண்யாவிடம் வளரும் பிள்ளை வளர்ந்த பின் நகரத்தில் டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை பார்க்கிற வாசு (ஒரு சூர்யா). காணாமல் போன பிள்ளையை நாசர் - அம்பிகா தம்பதிகள் எடுத்து வளர்க்கிறார்கள். அது வளர்ந்து கிராமத்து வீர இளைஞனாக கொடிகட்டிப் பறக்கிற வெற்றிவேல் (மற்றொரு சூர்யா).

     வாசுவுக்கு, டிவி தொகுப்பாளினியான 7 அப் ஸ்வாதி (பெப்சி உமா மாதிரி - ஆசின்) மீது காதல் பிறக்கிறது. இந்த நிலையில், வேலின் வாழ்க்கையில் வில்லனான, முன்னாள் அமைச்சரும், உள்ளூர் தாதாவுமான சங்கரபாண்டி (கலாபவன் மணி) குறுக்கிடுகிறார்.

     இந்த சந்தர்ப்பத்தில், வாசுவும், வேலும் சந்திக்கிறார்கள். சங்கரபாண்டியை பொது எதிரி என்று உணர்கிறார்கள். இருவரும் பேசி வைத்து இடம் மாறுகிறார்கள். வில்லனை எப்படி துவம்சம் செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதக் கதை.

     கோபம் கொப்பளிக்கும் கிராமத்து இளைஞனாகவும், நகரத்து இளைஞனாகவும் இரு வேடங்களில் கலக்கியிருக்கிறார் சூர்யா. இரு கேரக்டர்களில் வேல் கேரக்டர்தான் சூப்பராக வந்திருக்கிறது. உருவத்தில் பெரிய அளவில் கெட் அப் சேஞ்ச் இல்லாவிட்டாலும் கூட பாடி லாங்குவேஜிலும், வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் சூர்யா.

     பாசத்தைப் பொழியும் பாத்திரங்களில் தரவரிசைப்படி அம்மா சரண்யா, வளர்ப்பு அப்பத்தா லட்சுமி பின்னியெடுத்துள்ளனர். அசின் கொஞ்சம் சீண்டல் சிணுங்கள் என நடித்துள்ளார். வடிவேலுவுக்கு பல்சுவை நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்திற்கு இவரது காமெடி மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. கலாபவன்மணி. சிரித்தே வில்லத்தனம் செய்துள்ளார். லட்சுமி, ராஜ்கபூர், சரண்ராஜ் ஆகியோர் திறம்பட நடித்துள்ளனர்.

     யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், சுவிட்சர்லாந்து கனவுப் பாட்டு, கஜினியை நினைவுபடுத்துகிறது.

     படம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை விறுவிறுப்பாக போகிறது. விறுவிறுப்பான திரைக்கதை, பளிச் வசனங்கள், சற்றே புத்திசாலித்தனமான காட்சிகள் என்று கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஹரி.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/vel.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs