http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





வீராப்பு

நடிப்பு
சுந்தர்.சி, கோபிகா, பிரகாஷ்ராஜ், சுமித்ரா, தேஜாஸ்ரீ, சந்தானம்

சண்டைப்பயிற்சி
தளபதி தினேஷ்

எடிட்டிங்
எம். காசிவிஸ்வநாதன்

ஒளிப்பதிவு
கே.எஸ். செல்வராஜ்

பாடலாசிரியர்
நா.முத்துகுமார்

இசை
டி.இமான்

திரைக்கதை, வசனம், இயக்கம்
பத்ரி

தயாரிப்பு
ஹோம் மீடியா புரொடக்ஸன், சுஜாதா விஜயகுமார்

     பிரகாஷ்ராஜ் கண்டிப்பான ஆசிரியர். கணக்கில் புலி. இந்த உலகத்தில் நடக்கும் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் அடங்கும் என்பது அவரது தீராத நம்பிக்கை. மகன் சுந்தர்.சி-யை கணக்கில் பெரிய மேதையாக ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மகனுக்கோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம். தன் எண்ணத்துக்கு மாறாக மகன் இருக்கிறானே என்று மகனை கடுமையாகத் தண்டிக்கிறார்.

     கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்காததற்கு மகனை அடிக்க, மகனோ தன்னுடன் ஒப்பிடப்பட்ட மாணவனைக் கையில் குத்திவிடுகிறார். இதை அறிந்த பிரகாஷ்ராஜ் தன் மகனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புகிறார். அங்கிருந்து வெளியே வரும் சுந்தர்.சி கெட்டவனாக வருகிறார். இதனால் மகனை வெறுத்து ஒதுக்குகிறார் பிரகாஷ்ராஜ்.

     வழக்கம் போல் ரவுடி சுந்தர்.சி-யை டீச்சராக அந்த ஊருக்கு வரும் கோபிகா காதலிக்கிறார். சுந்தர்.சி ரவுடி என்பதால் அவரது தங்கை சந்தோஷியின் திருமணம் நின்றுபோகிறது. பிரகாஷ்ராஜ் மீது ஒரு கொலைப் பழியும் விழுகிறது. போராடி உண்மை குற்றவாளியைக் கண்டுபிடித்து, 'நான் ரொம்ப நல்ல ரவுடி' என்பதை நிரூபிக்கிறார் சுந்தர். சி.

     தலைநகரத்தை தொடர்ந்து, சுந்தர்.சி 'நல்ல' ரவுடியாக நடித்திருக்கும் மற்றொரு படம். முன்னதைவிட இதில் சுவாரஸ்யம் குறைவு. கண்டிப்பான அப்பாவாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல, நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். கோபிகாவு கொடுக்கப்பட்ட ஒன்றிரண்டு காட்சிகளையும் நிறைவாக செய்ய முயன்றிருக்கிறார்.

     இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் காமெடியைக் கெடுத்து விடுகின்றன. ஒளிப்பதிவு கே.எஸ். செல்வராஜ் அவர் பங்கைச் சரியாகச் செய்துள்ளார். பாடல்கள் வசனநடையில் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது டி. இமானின் இசை. இயக்குனர் பத்ரி பற்றிச் சொல்ல வேண்டியதில்லை பழைய மாவையே மீண்டும் அரைத்து வெற்றி பெற முயன்றிருக்கிறார்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/veerappu.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs