http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





தொட்டால் பூ மலரும்

நடிப்பு
ஷக்தி, கெளரி முன்ஜால், ராஜ்கிரண், நாசர், சுகன்யா, வடிவேலு, சந்தானம்

சண்டைப்பயிற்சி
தளபதி தினேஷ்

ஒளிப்பதிவு
ஆகாஷ் அசோக்குமார்

பாடலாசிரியர்
வாலி

கலை
தோட்டா தரணி

நடனம்
ராஜு சுந்தரம், டி.கே.எஸ். பாபு, நோபில், பாஸ்கர்

இசை
யுவன் ஷங்கர் ராஜா

கதை, திரைக்கதை, இயக்கம்
பி. வாசு

தயாரிப்பு
சபையர் மீடியா அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்

     டுட்டோரியல் காலேஜ் புரொபசர் தியாகராஜனின் (நாசர்) மகன் ரவி (ஷக்தி), கோடீஸ்வரி பெரிய நாயகியின் (சுகன்யா) மகள் அஞ்சலியைக் (கெளரிமுன்ஜால்) கண்டதும் காதலுறுகிறார். காதலுக்கு வில்லியாக வரும் நாயகியின் கோபக்கார - கோடீஸ்வர அம்மாவிடம் 'அஞ்சலியை மணம் முடிப்பேன்' என்று சவால் விட்டுக் கிளம்புகிறார் ரவி.

     தனது மகளைப் பாதுகாக்க, மும்பையில் தாதாவாகவுள்ள தனது சகோதரர் வரதராஜ வாண்டையாரிடம் (ராஜ்கிரண்) அஞ்சலியை ஒப்படைக்கிறார் பெரிய நாயகி. இரு வீட்டு எதிர்ப்பு, ராஜ்கிரணின் அச்சுறுத்தல் இவற்றையெல்லாம் மீறி ஷக்தி எப்படி புத்திசாலித்தனமாகக் காய் நகர்த்தி காதலியைக் கைப்பிடிக்கிறார் என்பதுதான் முடிவு.

     இயக்குனர் பி.வாசு கதாநாயகனான தன் மகனை பெரிய சாதனை செய்து அசகாய வேலைகள் செய்யும் பாத்திரமாகப் படைக்காமல் புத்திசாலித்தனத்தால் காரியங்களை சாதிக்கும் இளைஞனாகக் காட்டியிருப்பது யதார்த்தம்.

     புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஆடலிலும் அதிரடியிலும் நன்கு ஜொலிக்கிறார் புதுமுகம் ஷக்தி. ஷக்தியின் இளமைக்கும் துறுதுறுப்புக்கும் ஈடுகொடுக்க முடியாவிட்டாலும் நாயகி கெளரி முன்ஜாலும் சிறப்பாகவே செய்திருக்கிறார். வரதராஜ வாண்டையாராக வரும் ராஜ்கிரண், தன் இடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வில்லியாக வரும் சுகன்யா தனது கண்களாலேயே கோப உணர்வுகளை சிறப்பாக வெளியிடுத்தியிருக்கிறார். வடிவேலு வழக்கம்போல் காமெடி செய்துள்ளார்.

     யுவனின் இசையில் எல்லாப் பாடல்களிலும் இளமை வழிந்தோடுகிறது. வாலியின் வரிகளில் வாலிபம் எட்டிப் பார்க்கிறது. அசோக்குமாரின் ஒளிப்பதிவும், 'தளபதி' தினேஷின் சண்டைக்காட்சிகளும் படத்துக்கு பலம் சேர்ப்பவை. இயக்குனர் பி.வாசு கதையிலும் திரைக்கதையிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/thottalpoomalarum.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs