http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





பருத்தி வீரன்

நடிப்பு
கார்த்தி, ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு

சண்டைப்பயிற்சி
ராஜசேகர்

கலை
ஜாக்சன்

படத்தொகுப்பு
ராஜா முகமது

ஒளிப்பதிவு
ராம்ஜி

நடனம்
தினேஷ்

பாடலாசிரியர்
சினேகன்

இசை
யுவன் ஷங்கர் ராஜா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
அமீர்

தயாரிப்பு
K.E. ஞானவேல்ராஜா

     இயக்குனர் அமீரின் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், அறிமுக நாயகன் கார்த்தி, ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள படம் 'பருத்தி வீரன்'.

     பொன்வண்ணனின் மைத்துனர் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரப் பெண்ணுடன் சேர்ந்து சாராய வியாபாரம் செய்கிறார். அவளின் மரணத்திற்குப் பிறகு அவளின் மகளை மணக்கிறார். இதை பொன்வண்ணன் எதிர்க்கிறார். அதனால் தனியே சென்று குடித்தனம் நடத்துகிறார் மைத்துனர். குழந்தையும் பிறக்கிறது. லாரி மோதி மைத்துனரும் அவரின் மனைவியும் இறந்து விட குழந்தை அனாதையாகிறது. அதை எடுத்து வளர்க்கிறார் பொன்வண்ணனின் இளைய மைத்துனர் சரவணன். அந்தக் குழந்தைதான் பருத்திவீரன்.

     பருத்தி வீரனாக வரும் கார்த்தி மற்றும் அவனின் சித்தப்பாவாக வரும் சரவணனின் அட்டகாசத்துடன் படம் துவங்குகிறது. அடிதடி, வெட்டுக்குத்து, சாராயம், சண்டை, கும்மாளம் என டீக்கடை முதல் போலீஸ் லாக்கப் வரை அவர்கள் செய்யும் செயல்கள் ரசிக்கத்தக்கவை. இவற்றுடனே கார்த்தி ப்ரியாமணியிடையே மலரும் காதல். அவர்கள் காதல் வென்றதா, இல்லையா, என்பதுதான் கதை.

     தாரை, தப்பட்டம், தெம்மாங்கு என கிராமிய வாழ்க்கையுடன் இணைந்த ஒரு பதிவை படமாக அளித்திருக்கிறார் அமீர். படத்தின் இறுதிக் காட்சிகளில் யதார்த்தத்தைக் காட்டும்போது பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் உள்ள காட்சிகள், மற்றும் வன்முறைக்காட்சிகளை தவிர்த்திருக்கலாம் அல்லது வேறு வகையில் படமாக்கியிருக்கலாம். மற்றபடி பல காட்சிகளில் வசனங்களை குறைத்து காட்சிகளில் அழுத்தத்தை காட்டி தமது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.

     முதல் படத்திலே கார்த்தி தமது தந்தை நடிகர் சிவக்குமார், அண்ணன் சூர்யா ஆகியோரே வியக்கும் வண்ணம் பருத்திவீரனாக வாழ்ந்திருக்கிறார். முத்தழகுவாக வரும் ப்ரியாமணியிடம் இவ்வளவு நல்ல நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு இயக்குனர் அமீரை பாராட்ட வேண்டும். சரவணன் ஒரு தேர்ந்த குணச்சித்திர நடிகராக மிளிர்கிறார். பொன் வண்ணன் தமது பாத்திரத்தை அறிந்து நடித்திருக்கிறார். கஞ்சா கருப்புவின் நகைச்சுவையில் யதார்த்தம் இழைகிறது.

     ராம்ஜியின் ஒளிப்பதிவு, கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. யுவன் சங்கர் ராஜாவின் கிராமிய மணம் கமழும் இசை அருமை. தொடர்ந்து இயக்குனர் அமீர் இது போன்ற பல நல்ல படங்களை எடுப்பார் என நம்புவோம்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/paruthiveeran.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs