http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





நான் அவன் இல்லை

நடிப்பு
ஜீவன், சினேகா, மாளவிகா, நமீதா, ஜோதிர்மயி, கீர்த்தி சாவ்லா, லட்சுமி, லிவிங்ஸ்டன், மயில்சாமி

சண்டைப்பயிற்சி
தினேஷ், சுப்ரீம் சுந்தர்

எடிட்டிங்
சுரேஷ் அர்ஸ்

ஒளிப்பதிவு
யு.கே. செந்தில்குமார்

நடனம்
தருண்ராஜ், சாந்தி, ஸ்ரீதர், தினேஷ்

பாடலாசிரியர்
பழனிபாரதி, பா.விஜய்

இசை
விஜய் ஆன்டனி

வசனம்
பட்டுக்கோட்டை பிரபாகர்

இயக்கம்
செல்வா

தயாரிப்பு
வி. இத்தேஷ் ஜபக்

     தமிழ் திரை உலகின் முதல் ரீமேக் படம் இது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்து முன்னர் வெளிவந்தது. இப்போது செல்வா இயக்கத்தில் ஜீவன் நடித்து வெளிவந்துள்ளது.

     பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பின்னர் கைவிட்டு விடுகிறார் நாயகன் அண்ணாமலை (ஜீவன்). தொழிலதிபர் விக்னேஷ் என்கிற பெயரில் மாளவிகாவிடல் காதல் கொண்டு மணம் முடிக்கிறார். பிரபல ஓவியர் ஜாகீர் உசேன் பெயரில் சினேகாவை ஏமாற்றுகிறார். மாதவன் மேனன் என்ற கேரளத்தவராக நடித்து ஜோதிர்மயியை திருமணம் செய்கிறார். ஹரிதரதாஸ் என்ற போலிச் சாமியார் வேடத்தில் கீர்த்தி சாவ்லாவை மயக்கி திருமணம் செய்கிறார். ஷாம் பிரசாத் என்ற பெயரில் தொழிலதிபர் நமீதாவிடம் நெருங்குகிறார்.

     இவ்வளவு பேரையும் ஏமாற்றிய ஜீவன் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் குற்றம் சாட்டும்போதும், நான் அவன் இல்லை என மறுக்கிறார் அண்ணாமலை. இந்த அண்ணாமலையாக நடிக்கும் ஜோசப் பெர்னாண்டஸ் தான் தன் தம்பி என்கிறார் லிவிங்ஸ்டன். ஆனால் அதையும் மறுக்கிறார் அண்ணாமலை. சரியான ஆதாரங்களோ, தடயங்களோ இல்லாததால் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக்கி அண்ணாமலையை விடுதலை செய்கிறார் நீதிபதியாக நடித்துள்ள லட்சுமி. கடைசியாக அண்ணாமலை என்ன ஆகிறான் என்பதுதான் படத்தின் முடிவு.

     படத்தில் பல வேடங்களில் வரும் ஜீவன் நன்கு நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நடிகைகள் அனைவரும் கவர்ச்சியைக் காட்டவே பயன்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனத்தில் கோட்டை விட்டுள்ளது பல இடங்களில் தெரிகிறது. பாடல் காட்சிகளில் விரசம் அதிகம். விஜய் ஆன்டனியின் இசை நன்றாக இருந்தாலும், கவர்ச்சி அதனை மறைக்கிறது.

     நவீன தொழில்நுட்பங்கள் வந்தவிட்ட இந்த காலத்திலும் மோசடி செய்யும் ஒருவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. அதே போல் பெண்கள் எல்லோரையும் இவ்வளவு ஏமாளிகள் போல் காட்டியிருப்பது தேவையற்றது.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/naanavanillai.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs