http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





கிரீடம்

நடிப்பு
அஜீத் குமார், த்ரிஷா, ராஜ்கிரண், சரண்யா, விவேக், அஜய்குமார், சந்தானம், ஹனீபா, மீனாகுமாரி, மனோபாலா, ரவிகாலே, எம்.எஸ். பாஸ்கர்

சண்டைப்பயிற்சி
சூப்பர் சுப்பராயன்

எடிட்டிங்
ஆண்டனி

ஒளிப்பதிவு
திரு, நிரவ் ஷா

பாடலாசிரியர்
நா.முத்துகுமார்

இசை
ஜி.வி. பிரகாஷ் குமார்

கதை, இயக்கம்
ஏ.எல். விஜய்

தயாரிப்பு
ஆட்லேப்ஸ் மற்றும் சுரேஷ் பாலாஜி

     ஒரு ஊரில் ரவுடியிசம் கொடிகட்டிப் பறக்கிறது. மார்க்கெட்டில் அட்டகாசம் செய்யும் ரவுடிகளை புதிய இன்ஸ்பெக்டர் அஜீத் அடித்துத் துவைக்கிறார். ரவுடிகளை சங்கிலியால் இணைத்து பிணைத்து ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போகிறார். ஆஹா என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அது நிஜமல்ல கனவு. ராஜ்கிரண்தான் தன் மகனைப் பற்றி இப்படிக் கனவு காண்கிறார்.

     நேர்மையான தலைமைக் காவலரான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் போலிஸ் இன்ஸ்பெக்டராகி இப்படி அநியாயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்கிற அவரது விருப்பமே கனவாகிறது. அப்படியே அஜீத்தும் இன்ஸ்பெக்டர் தேர்வுக்குத் தயாராகிறார்.

     இடையே ஒரு எம்.எல்.ஏ. மகன் போக்குவரத்துக்கு இடையூறு செய்து போலிஸ்காரர் மீது கை வைத்து அடாவடி செய்ய, ஆவேசமான ராஜ்கிரண் அவன் மீது நடவடிக்கை எடுத்து காரை பறிமுதல் செய்கிறார். இதனால் எம்.எல்.ஏ. செல்வாக்கால் ராஜ்கிரண் கோடியக்கரைக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

     கோடியக்கரையில் ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது. ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடித்து உதைக்கின்றனர் ரவுடிகள். இதனால் ஆவேசமடைந்த அஜீத் அந்த தாதா அஜய்குமாரை அடிக்கிறார். இதன் பிறகு அஜீத்தின் வாழ்க்கை மாறுகிறது.

     தங்களின் சிம்ம சொப்பனமாக இருந்த வரதன் (அஜய்குமார்) வீழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அஜீத்தை வரவேற்று தலைவனாக உயர்த்திவிடுகிறார்கள். சிலர் அஜீத்தை அடுத்த தாதாவாக நினைக்கிறார்கள். தன் மகனின் வாழ்க்கைப் பாதை மாறிவிட்டதால், தன் கனவு பலிக்காதோ என்று எண்ணி வருத்தப்படுகிறார் ராஜ்கிரண்.

     அஜீத்துக்கோ புலிவாலைப் பிடித்த கதை. தான் ஒரு ரவுடியில்லை என்று அஜீத் நிரூபிக்க முயல அப்பா ராஜ்கிரணின் கோபத்துக்கும் காதலி த்ரிஷாவின் வருத்தத்துக்கும் ஆளாகிறார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வாகிறார். ஆனால் அந்த சமயத்தில் தாதா வரதனான அஜய்குமார், அஜீத் குடும்பத்தை அடித்து நொறுக்க, புயலாக மாறிய அஜீத் தாதாவை சூரசம்ஹாரம் செய்வது கிரீடம் படத்தின் க்ளைமாக்ஸ்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/kireedam.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs