http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





கருப்பசாமி குத்தகைதாரர்

நடிப்பு
கரண், மீனாட்சி, வடிவேலு, சக்தி குமார்

சண்டைப்பயிற்சி
அனல் அரசு

எடிட்டிங்
எஸ். சதீஷ்

ஒளிப்பதிவு
ஜே. ஸ்ரீதர்

நடனம்
காதல் கந்தாஸ்

பாடலாசிரியர்
யுகபாரதி

இசை
தினா

இயக்கம்
மூர்த்தி

தயாரிப்பு
சேது, வினித் கோகியா, ஆர்.பாலசுப்ரமணியன்

நிறுவனம்
பிரண்ட்ஸ் சினிமா (பி) லிமிடெட்

     ஜெராக்ஸ் என்ற செல்லப் பெயர் கொண்ட கருப்பசாமி (கரண்) மதுரை பேருந்து நிலையத்தில் சைக்கிள் ஸ்டேண்டை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். கூடவே நடன குரூப் ஒன்றையும் நடத்துகிறார். மிமிக்ரியும் செய்கிறார். எதைப்பற்றியும் கவலைப் படாமல் ஜாலியாக வாழ்க்கை நடத்துகிறார்.

     மருத்துவக்கல்லூரி மாணவி ராசாத்தி (மீனாட்சி) கருப்பசாமி ஸ்டேண்டில் தனது சைக்கிளை தினமும் நிறுத்த வருகிறார். அதன் மூலம் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. கருப்பசாமியின் நல்ல நடத்தை பிடித்துப் போக அவன் மேல் காதல் கொள்கிறார் ராசாத்தி. கருப்பசாமிக்கு ராசாத்தி மேல் காதல் இருந்தாலும், படிப்பு தான் முக்கியம் என எண்ணுகிறார்.

     இதற்கிடையே இவர்களின் காதல் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. ராசாத்தியின் படிப்பை நிறுத்த முடிவு செய்கிறார்கள். இதை அறிந்த கருப்பசாமி அவர்களிடம் சென்று அப்படிச் செய்ய வேண்டாமென்று கெஞ்சுகிறான். ராசாத்தியின் பெற்றோர்கள் அவள் படிப்பை தொடர வேண்டுமென்றால் காதலை இழக்க வேண்டும் என்கிறார்கள். வேறு வழியின்றி இதற்கு ஒப்புக்கொள்ளும் கருப்பசாமி, கடைசியில் எப்படி ராசாத்தியை கைப்பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

     கருப்பசாமி பாத்திரமாகவே மாறி திறமையான நடிப்பால் நம்மைக் கவர்கிறார் கரண். புதுவரவு மீனாட்சி மதுரைப் பெண்ணாகவே மாறியுள்ளார். அடுத்தவரின் பணத்தை ஏமாற்றி பறிக்கும் படித்துரை பாண்டியாக வந்து சிரிக்க வைக்கிறார் வடிவேலு.

     தீனாவின் இசையில் இரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. மதுரையின் சுற்றுப்புறங்களை நன்கு காட்டுகிறது ஸ்ரீதரின் கேமரா. பல காட்சிகளில் புதுமையாக யோசித்து, அனைவரும் ரசிக்கும்படியாக ஒரு படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் மூர்த்தி.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/karuppasamykuthagaitharar.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs