http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





சென்னை 600028

நடிப்பு
ஷிவா, பிரேம்ஜி, ஜெய், அரவிந்த் ஆகாஷ், பிரசன்னா, ரஞ்சித், நிதின் சத்யா, அஜய் ராஜ், விஜய், அருண், கார்த்திக், விஜயலட்சுமி, கிறிஸ்டினா ஜடாக்

சண்டைப்பயிற்சி
சுப்ரீம் சுந்தர்

படத்தொகுப்பு
B. லெனின்

ஒளிப்பதிவு
சக்தி சரவணன்

நடனம்
கல்யாண், அஜய் ராஜ்

கலை
விதேஷ்

பாடலாசிரியர்
வாலி, கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா

பின்னணி இசை
பிரேம்ஜி அமரன்

இசை
யுவன் ஷங்கர் ராஜா

எழுத்து & இயக்கம்
வெங்கட் பிரபு

தயாரிப்பு
எஸ்.பி.பி. சரண், ஜே.கே. சரவணா

     2007 வருட உலகக் கோப்பை கிரிக்கெட் முடிவு பெற்றுள்ள நேரத்தில் வந்துள்ள படம். இளைஞர்களின் கிரிக்கெட் மோகத்தைப் பற்றிய படம். ராஜாஅண்ணாமலைபுரம் இளைஞர்களின் ஷார்க்ஸ் அணியும், ராயபுரத்தைச் சேர்ந்த ராக்கர்ஸ் அணியும் பரம எதிரிகள். போட்டிகளில் ராக்கர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைகிறது ஷார்க்ஸ் அணி. இரு அணியினரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கிறார்கள்.

     இதனிடையே ராக்கர்ஸ் அணியின் ஜெய் வீடு மாறி ஷார்க்ஸ் அணியினரின் இடத்திற்கு வருகிறார். ராயபுரம் அணியினர் ஜெய்யை கழற்றிவிட்டுக் கல்தா கொடுக்கிறார்கள். ஷார்க்ஸ் அணியினருடன் ஜெய்க்கு முதலில் உரசலும் அப்புறம் நட்பும் ஆரம்பிக்கிறது.

     இதற்கிடையே கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகின்றன. காதல், மோதல் பிரச்னைகளால் நிலைகுலைந்த நிலையில் போட்டிக்குள் நுழைகிறது ஷார்க்ஸ் அணி. அரை இறுதியில் ராக்கர்ஸை அணியைச் சந்திக்கிறது ஷார்க்ஸ் அணி. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவு தான் படத்தின் முடிவும்.

     எதிர் ஏரியாவில் முறைப்பும் விறைப்புமாக அலைந்தாலும், பாத்ரூமில் அழுது, அருமையாக நடித்திருக்கிறார் ஜெய். ஜெய்-விஜயலட்சுமி காதலை கண்டு புலம்பும் ரேடியோ மிர்ச்சி ஷிவா, கைக்கே வந்தாலும் பந்தை பிடிக்கத் தெரியாத பிரேம்ஜி, ஸ்கூல் மாணவியாக வரும் விஜயலட்சுமி, சிறுவர்களிடம் பெட் கட்டி அடி வாங்கும் நிதின் சத்யா, ஆம்புலன்ஸில் கிரிக்கெட் பேட் எடுத்து வரும் அஜய், பாட்டிலின் கடைசி சொட்டுக்காக ஏங்கும் விஜய், அணி மேனேஜர் இளவரசு என அனைவரும் நன்றாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அருமை.

     குத்து, வெட்டு, ரத்தம், செண்டிமெண்ட், காமெடி என்ற வழக்கமான தமிழ் படம் போல் அரைத்த மாவையே அரைக்காமல் உள்ளூர் கிரிக்கெட் பற்றிய படத்தை மிக இயல்பாக எடுத்து தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/chennai600028.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs