http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





அழகிய தமிழ் மகன்

நடிப்பு
விஜய், ஷ்ரேயா, நமீதா, ஆசிஷ் வித்யார்த்தி, சந்தானம், ஸ்ரீமன்

ஒளிப்பதிவு
பாலசுப்ரமணியம்

இசை
ஏ.ஆர். ரஹ்மான்

இயக்கம்
பரதன்

தயாரிப்பு
ஸ்வர்கசித்ரா அப்பச்சன்

     விஜய் முதல் முறையாக 2 வேடங்களில் நடித்துள்ள வித்தியாசமான படம் அழகிய தமிழ் மகன். படு ஸ்மார்ட் ஆகத் தோன்றும் விஜய், ரசிகர்களுக்கு குஷியூட்டுகிறார். படம் முழுக்க அவர் செய்யும் காமெடியும், ஸ்டைல்களும் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக அமைந்துள்ளது. விஜய்யின் திறமை, பலம், செல்வாக்கு ஆகியவற்றை அறிந்து அதற்கேற்ப கதையை கொண்டு சென்றுள்ளார் அறிமுக இயக்குநர் பரதன்.

     படத்தில் விஜய் ஹீரோ மட்டுமல்ல வில்லனும் அவர்தான். பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கும் விஜய் (குரு) ஒரு தடகள வீரர். நடிகையாகவே இப்படத்தில் வரும் ஷகீலாவின் வீட்டில் நண்பர்கள் சந்தானம், சத்யனுடன் குடியிருக்கிறார் குரு. பெரும் பிசினஸ் புள்ளியான ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் அபினயாவும் (ஷ்ரேயா), குருவும் தற்செயலாக சந்திக்கின்றனர். காதலில் விழுகின்றனர். இந்தக் காதலை இருவரது குடும்பமும் எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் குருவுக்குள் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டு வருங்காலத்தில் நடக்கப் போவதை முன் கூட்டியே அறியும் சக்தி கிடைக்கிறது. டாக்டர்கள் இதனை ஈ.எஸ்.பி. சக்தி என்கின்றனர். குருவுக்கும், அபினயாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. ஈஎஸ்பி சக்தி ஏற்படுத்தும் குழப்பத்தால், நிச்சயதார்த்தத்திற்கு முன்பு அபினயாவைப் பிரிந்து மும்பைக்குப் போகிறார் குரு. அங்கு தன்னைப் போலவே இருக்கும் பிரசாத்தை (வில்லன் விஜய்) பார்க்கிறார். அவரை சந்திக்கும் முன்பு விபத்தில் சிக்கி காயமடைகிறார். படு ஜாலியான, கவலை இல்லாத மனிதனான பிரசாத், பணத்துக்காக எதையும் செய்யக் கூடிய குணமுடையவர். சென்னைக்கு வரும் பிரசாத்தைப் பார்ப்போர் குரு என்று நினைத்து விடுகின்றனர். அபினயாவும் அவரைக் குரு என்று நினைத்து தனது வீட்டுக்குக் கூட்டி வருகிறார். ஷ்ரேயாவின் பணச் செழிப்பைப் பார்க்கும் பிரசாத், அதை அபகரிக்க, அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். இந்த நிலையில் குரு சென்னைக்குப் பறந்து வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

     டான்ஸ், காமெடி ஆகியவற்றில் வெளுத்துக் கட்டியுள்ளார் விஜய். டைட்டில் பாடலில் நடனம் அருமை. வில்லன் வேடத்திலும் விஜய் வித்தியாசம் காட்டியுள்ளார். படத்தின் பெரும் பலமே விஜய்தான். வித்தியாசமான கேரக்டரில் வருகிறார் ஷ்ரேயா. கவர்ச்சியோடு நடிக்கவும் செய்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். நமீதா வழக்கம் போல் கவர்ச்சி காட்டுகிறார். சந்தானத்தின் காமெடி படு ஜோர். மதுரைக்கு போகாதடி பாடல் சூப்பர் ஹிட். ரீமிக்ஸ் ஆக இடம் பெற்றுள்ள சிவாஜியின் சூப்பர் ஹிட்டான பொன்மகள் வந்தால் பாடல் ரசிக்கும்படி உள்ளது.

     படத்தின் நீளமும் ஒரு பின்னடைவாக இருக்கிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் படம் ஓடுகிறது. படத்தின் கிளைமாக்ஸை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவு. விஜய் தனது நடிப்பால் அனைத்துக் குழப்பங்களையும் சமாளித்து விடுகிறார் என்றே சொல்லவேண்டும்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2007/azhagiyathamizhmagan.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs