http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
தமிழ் திரைப்படங்கள்





ஜித்தன்

நடிப்பு
ரமேஷ், பூஜா, சரத்குமார், கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், நளினி, எஸ்.வி.சேகர்

கதை
ராம்கோபால் வர்மா

ஒளிப்பதிவு
ரமேஷ்பாபு

இசை
ஸ்ரீகாந்த் தேவா

இயக்கம்
வின்சென்ட் செல்வா

தயாரிப்பு
ராதிகா சரத்குமார்

நிறுவனம்
ராடான் மீடியாவொர்க்ஸ் (இந்தியா) லிமிடெட்

     சாமர்த்தியமும் அதிர்ஷ்டமும் துளிக்கூட இல்லாதவராக ரமேஷ். அவரின் அம்மாவாக அடங்காப்பிடாரி பாத்திரத்தில் நளினி. ரமேஷ் செய்யும் செயல்களுக்காக அவரை அடிஅடியென விளாசுகிறார். அதை தடுக்கும் பூஜாவின் மீது ரமேஷுக்கு சிறு வயது முதலே காதல். இடையில் வரும் பணக்கார இளைஞன் முகேஷ் பூஜாவின் காதலனாகிறார். ஒரு நாள் பூஜாவை ரெஸ்டாரண்டில் பார்த்து ரமேஷ் அவருக்கு எதிரில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அச்சமயம் அங்கு வரும் முகேஷ் அதைக் கண்டு ரமேஷை அடிக்க, பூஜாவும் அவரை பைத்தியக்காரன் என்று சொல்ல, மிகவும் உடைந்து போகிறார் ரமேஷ். கடற்கரையில் மனமுடைந்து அழுதுகொண்டிருக்கும்போது அவர் கையில் சிலை ஒன்று கிடைக்க, அந்த சிலையிடம் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தும் போது யார் கண்ணிலும் படாமல் தொலைந்து போனாலும் பரவாயில்லை என்று கூறுகிறார். சிலை அருளால் அப்படியே யார் கண்ணிலும் படாமல் மாயமாக மறைகிறார்.

     தன் சக்தியை தெரிந்து கொண்டு அதைக்கொண்டு தன்னை இகழ்ந்தவர்களையெல்லாம் ஒருவழி பண்ணுகிறார் ரமேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் பூஜாவின் காதலைப் பெற பணம் இருந்தால் தான் முடியும் என தவறாக முடிவு செய்கிறார். அதற்காக ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். வங்கிக் கொள்ளையை துப்புத் துலக்க காவல்துறை அதிகாரிகளாக சரத்குமாரும், கலாபவன் மணியும் வருகிறார்கள். அப்போது ரமேஷின் அதிசய மறையும் சக்தி பற்றி அறிகிறார் சரத்குமார். இதனிடையே பூஜாவும் முகேஷும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இதையறிந்து வெகுண்டு எழுகிறார் ரமேஷ். பூஜாவை அடைவதற்காக தன் மறையும் சக்தி கொண்டு ஊரையே திகிலூட்டுகிறார். ரமேஷின் முயற்சிகளை முறியடித்து பூஜாவும் ரமேஷும் திருமணம் செய்து கொண்டார்களா? ரமேஷ் நிலைமை என்ன ஆயிற்று ? எனபது தான் கதை.

     இது ரமேஷின் முதல் படம். தனக்கு கிடைத்த பாத்திரத்தை உணர்ந்து முடிந்தவரை நடித்துள்ளார். அழகு பொம்மையாக வரும் பூஜா சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். அடங்காப்பிடாரி மனைவியாக நளினி சிறப்பாக செய்திருக்கிறார். மனைவிக்கு அடங்கி இருக்கும் பாத்திரத்தில் லிவிங்ஸ்டன் நடிப்பு அருமை. பூஜாவின் அப்பாவாக வரும் எஸ்.வி.சேகர் நகைச்சுவையில் அதிகம் கலக்கவில்லை. பூஜாவின் காதலனாக வரும் முகேஷ் நடிப்பு சுமார் தான். காவல்துறை அதிகாரியாக கௌரவத் தோற்றத்தில் வரும் சரத்குமார் கலக்கி இருக்கிறார். இவருடன் பணிபுரியும் அதிகாரியான கலாபவன் மணி வழக்கம் போல் மிமிக்ரி செய்கிறார்.

     காயப் இந்தி படத்தின் மறுஆக்கம் (ரீமேக்) தான் ஜித்தன். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அருமை. ரமேஷ்பாபுவின் கிராபிக்ஸ் காட்சிகளும் ஒளிப்பதிவும் கண்ணுக்கு குளிர்ச்சி. ராம்கோபால் வர்மாவின் மூலக்கதையைக் கொண்டு தமிழுக்கு ஏற்றவாறு உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வின்சென்ட் செல்வா. வித்யாசமான கதையை படமாக்கியதற்கு அவரை பாராட்ட வேண்டும்.



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/2005/githan.html




திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs