திரைப்பட இணைய இதழ்
  


முள்ளும் மலரும்

நடிப்பு
ரஜினிகாந்த், சரத் பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, வெண்ணிற ஆடை மூர்த்தி

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
பாலு மகேந்திரா

பாடல்கள்
கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன்

படத்தொகுப்பு
டி. வாசு

கதை
உமா சந்திரன்

திரைக்கதை, இயக்கம்
ஜோ. மகேந்திரன்

தயாரிப்பு
வேணு செட்டியார், வி. மோகன்

தயாரிப்பு நிறுவனம்
ஆனந்தி பிலிம்ஸ்

வெளீயீடு:
15 ஆகஸ்டு 1978

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கல்கி இதழில் உமாசந்திரன் தொடர் கதையாக எழுதிய முள்ளும் மலரும் நாவலின் கதையை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் இந்நாவல் முதல் பரிசு பெற்றது. நாவலில் காளி புலியிடம் போராடி கையை இழந்திருப்பான். ஆனால் திரைப்படத்தில் லாரி மோதி கையை இழந்ததாக மகேந்திரன் சித்தரித்திருப்பார். அதே போல் நாவலில் காளியும் மங்காவும் இறப்பதாக முடிவு இருக்கும். ஆனால் மகேந்திரன் தனது திரைக்கதையில் அதனை தவிர்த்திருப்பார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம், கங்கை அமரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தமிழில் பாலுமகேந்திராவின் முதல் படமாகும். இயக்குநர் மகேந்திரனுக்கு பாலு மகேந்திராவை நடிகர் கமல்ஹாசன் அறிமுக செய்து வைத்தார். மேலும் கமல்ஹாசன் இப்படத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராகவும் பணியாற்றினார்.

இப்படத்தினை ஆனந்தி பிலிம்ஸ் சார்பில் வேணு செட்டியார் மற்றும் வி. மோகன் தயாரித்திருந்தனர். 1977ல் ஆடு புலி ஆட்டம் திரைப்பட வெளியீட்டிற்குப் பின் மகேந்திரன் நடிகர் ரஜினிகாந்திடம் அடுத்து தான் இயக்கும் படத்தில் அவரையே கதாநாயகனாக நடிக்க வைப்பதாக தெரிவித்திருந்தார். அதே போல் முள்ளும் மலரும் படத்தில் அவரையே தேர்வு செய்தார். படத் தயாரிப்பாளரான வேணு செட்டியார் இதனை விரும்பாவிடினும் மகேந்திரன் உறுதியாயிருக்கவே வேறு வழியின்றி இதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்திற்கு பெருமை சேர்த்ததோடு, தன்னை முன்னிறுத்திய இயக்குநர் மகேந்திரனின் நம்பிக்கையை மெய்ப்படுத்தினார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிருங்கேரியிலும், சில காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டன. மொத்தம் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பாண்டிச்சேரி அருகே மகேந்திரன் தான் பார்த்த உறியடி காட்சியினால் கவரப்பட்டு, கதையில் இல்லாவிட்டாலும், திரைக்கதையில் இரு உறியடி காட்சிகளை வைத்திருந்தார். அதே போல் சிருங்கேரி கடல் சூழ்நிலைகளால் கவரப்பட்டு மகேந்திரன், மங்கா கதாபாத்திரம் மீன் மீது பிரியம் கொண்டதாக மாற்றினார்.

சிறந்த திரை வசனகர்த்தா என்பதற்காகவே மகேந்திரனை இயக்குநராக தேர்வு செய்தார் வேணு செட்டியார், ஆனால் முள்ளும் மலரும் திரைப்படத்திலோ வசனங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உபயோகப்படுத்தப்பட்டிருந்தன. காட்சி வழியாகவே கதை சொல்லி அசத்தியிருந்தார் இயக்குநர் மகேந்திரன்.

*****
பாடல்கள்
1. செந்தாழம் பூவில்
படம் : முள்ளும் மலரும் (1978)
பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ம்ம்ம்ம்ம்...
ம்ம்ம்ம்ம்...
ம்ஹும்... ம்ஹும்... ம்ஹும்...

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்ம்ம்ம்...

வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ

ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது

ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது

காடுகள் மலைகள்
தேவன் கலைகள்

செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாகப் போகிறாள்

ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்

பள்ளம் சிலர் குள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்

பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்

மலையின் காட்சி
இறைவன் ஆட்சி

செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை

இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடைக் காற்று
வானுலகைக் காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது

மறவேன் மறவேன்
அற்புதக் காட்சி

செந்தாழம் பூவில்

செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா

அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்


சக்தி வழிபாடு
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

நீ இன்றி அமையாது உலகு
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

தீட்டும் புனிதமும்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

துறவி
இருப்பு உள்ளது
ரூ.295.00
Buy

மலைவாழ் சித்தர்கள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

குடும்ப நாவல்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

கொங்கு மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சிங்களன் முதல் சங்கரன் வரை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சத்திய சோதனை
இருப்பு உள்ளது
ரூ.245.00
Buy

நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்
இருப்பு உள்ளது
ரூ.295.00
Buy

மருத்துவ ஜோதிடம்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

கிழிபடும் காவி அரசியல்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

இவர்கள் வென்றது இப்படித்தான்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

ஆசியாவின் பொறியியல் அதிசயம்!
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

சின்னஞ்சிறு பழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)