தமிழ்திரைஉலகம்.காம் - திரைப்படத் தகவல்கள் : தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943) | தமிழறியும் பெருமாள் (1942)


திரைப்பட இணைய இதழ்
  அசோக் குமார்

நடிப்பு
எம்.கே.தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், ரஞ்சன், பி.கண்ணாம்பா, டி.ஏ.மதுரம்

கதை
இளங்கோவன் (தணிகாசலம்)

இசை
பாபநாசம் சிவன்

இயக்கம்
ராஜா சந்திரசேகர்

தயாரிப்பு நிறுவனம்
மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனி

வெளியீடு
7 அக்டோபர் 1941

     அசோக் குமார், இளங்கோவன் கதை வசனத்தில், ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், ரஞ்சன், பி.கண்ணாம்பா, டி.ஏ.மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் நியூடோன் ஸ்டுடியோவில் இப்படம் தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். இப்படத்தில் மகேந்திரன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.

     போரில் வென்று வந்த தனது மகன் குணாளனை (தியாகராஜ பாகவதர்), தன் இளைய மனைவி திசியரட்சதைக்கு (கண்ணாம்பா) அறிமுகப் படுத்துகிறார் அசோகர் (வி. நாகையா). குணாளனுக்கு விரைவில் யுவராஜ பட்டாபிசேகம் செய்ய எண்ணுகிறார்.

     இச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் (டி. வி. குமுதினி) சொல்கிறான் குணாளன். அதை மறைந்திருந்து கேட்கிறாள் திசியரட்சதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்).பட்டாபிசேகத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆயினும் குணாளனின் பட்டாபிசேகம் நடக்கிறது.

     பட்டாபிசேகத்தின் போது, திசியரட்சதை குணாளன் நெற்றியில் திலகமிடுகிறாள். தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொள்கிறாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் பாடும் காதல் பாட்டு திசியரட்சதையின் காமத்தீயை கிளறுகிறது.

     தந்தையின் விருப்பப்படி மறுநாள் குணாளன் திசியரட்சதையின் முன் பாடுகிறான். அப்போது, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க வெளியே செல்கிறார். தனித்து விடப்படும் இளையராணி, குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டுகிறாள். குணாளன் மறுக்கிறான். இதனால் அசோகர் வந்ததும், குணாளன் மீது வீண் பழி சுமத்துகிறாள் திசியரட்சதை. குணாளன் நாடு கடத்தப் படுகிறான். குணாளனின் இரு கண்களும் பிடுங்கப்படுகின்றன. கர்ப்பவதியான காஞ்சனமாலாவும் துரத்தப்படுகிறாள்.

     குணாளனும், காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்திக்கிறார்கள். காஞ்சனமாலைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தையுடன் ஊரூராக பிச்சையெடுக்கிறார்கள். திடீரென்று ஒருநாள் குழந்தை இறந்து விடுகின்றது.

     மகனின் பிரிவால் மன்னர் அசோகரின் உடல் நலம் குன்றுகிறது. மருத்துவர் சொற்படி, சுவர்ணகிரியில் திசியரட்சதையுடன் வந்து தங்குகிறார் அசோகர். அப்போது பாட்டுப்பாடி பிச்சையெடுக்கும் குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உண்மை அறிகிறார் அரசர். திசியரட்சதை நஞ்சருந்தி உயிர் துறக்கிறாள். புத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் புத்தரின் சந்நிதானத்தில் குணாளன் கண்கள் இரண்டையும் பெற, அனைவரும் சுகமாக வாழ்கிறார்கள்.

     இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார்.

புதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்
தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)
தமிழறியும் பெருமாள் (1942)
அசோக் குமார் (1941)
வேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)
பிரகலாதா (1939)
மாயா மச்சீந்திரா (1939)
வீர ஜெகதீஸ் (1938)
தட்சயக்ஞம் (1938)
இரு சகோதரர்கள் (1936)
சதி லீலாவதி (1936)
பியார் பிரேமா காதல் (2018)
கனா (2018)
கவரிமான் (1979)
கல்லுக்குள் ஈரம் (1980)
மின்னலே (2001)
ரோஜா (1992)
ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பொல்லாதவன் (2007)
தங்க மீன்கள் (2013)
புறம்போக்கு என்கிற பொதுவுடமை (2015)
நிழல்கள் (1980)
பராசக்தி (1952)
பட்டினத்தார் (1936)
சத்தியவான் சாவித்திரி (1933)
காலவா (1932)
சம்பூர்ண ஹரிச்சந்திரா (1932)
பாரிஜாத புஷ்பஹாரம் (1932)
ராமாயணம் (1932)
காளிதாஸ் (1931)


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
புதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்
ஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)
வாயாடி பெத்த புள்ள - கனா (2018)
பூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)
என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
மருதமலை மாமணியே - தெய்வம் (1972)
ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)
சிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)
வசீகரா என் நெஞ்சினிக்க - மின்னலே (2001)
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே - ரோஜா (1992)
சின்ன சின்ன ஆசை - ரோஜா (1992)
உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்கமீன்கள் (2013)
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் - பொல்லாதவன் (2007)
நிகல் நிகல் - காலா (2018)
கண்ணம்மா கண்ணம்மா - காலா (2018)
வாடி என் தங்க செல்லமே - காலா (2018)
செம்ம வெயிட்டு - காலா (2018)
பொன் மாலை பொழுது - நிழல்கள் (1980)
மடை திறந்து தாவும் நதியலை நான் - நிழல்கள் (1980)
பூங்கதவே தாழ் திறவாய் - நிழல்கள் (1980)
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |

புதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்
தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)
தமிழறியும் பெருமாள் (1942)
அசோக் குமார் (1941)
வேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)
பிரகலாதா (1939)
மாயா மச்சீந்திரா (1939)
வீர ஜெகதீஸ் (1938)
தட்சயக்ஞம் (1938)
இரு சகோதரர்கள் (1936)
சதி லீலாவதி (1936)
பியார் பிரேமா காதல் (2018)
கனா (2018)
கவரிமான் (1979)
கல்லுக்குள் ஈரம் (1980)
மின்னலே (2001)
ரோஜா (1992)
ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பொல்லாதவன் (2007)
தங்க மீன்கள் (2013)
புறம்போக்கு என்கிற பொதுவுடமை (2015)
நிழல்கள் (1980)
பராசக்தி (1952)
பட்டினத்தார் (1936)
சத்தியவான் சாவித்திரி (1933)
காலவா (1932)
சம்பூர்ண ஹரிச்சந்திரா (1932)
பாரிஜாத புஷ்பஹாரம் (1932)
ராமாயணம் (1932)
காளிதாஸ் (1931)