http://www.tamilthiraiulagam.com
திரை உலக தகவல்கள்

தமிழ் திரை உலகம்


புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்

     புரட்சிக் கலைஞர் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களின் உண்மையான விஜயராஜ ஆகும். இவர் மதுரையில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் நாள் கே.என். அழகர்சுவாமி நாயுடு, திருமதி ஆண்டாள் தம்பதியருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் மனைவி பெயர் பிரேமலதா ஆகும். இவருக்கு விஜய் பிரபாகர், சண்முகப் பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

     இனிக்கும் இளமை படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகாந்த் அவர்கள் 150 படங்கள் நடித்து முடித்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, ஊமைவிழிகள், செந்தூரப் பூவே, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், ரமணா, சொக்கத்தங்கம் போன்ற படங்கள் இவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தன. கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் காட்டிலாகா அதிகாரியாக நடித்துப் பேரும் புகழும் பெற்றதால் இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் 'கேப்டன்' என்று அழைக்கபடுகிறார்.

     இவர் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இவரின் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று திமுக, அஇஅதிமுக கட்சிகளுக்கு அடுத்து தனிப்பெருங் கட்சியாக உருவெடுத்துள்ளார். விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் அவர்கள் 13,777 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருகிறார்.

விஜயகாந்த் நடித்துள்ள படங்கள்

1. இனிக்கும் இளமை - எம்.ஏ. காஜா - 16-03-1979
2. அகல் விளக்கு - ஆர் செல்வராஜ் - 07-12-1979
3. நீரோட்டம் - ஜெய்சந்தர் - 04-07-1980
4. சாமந்திப்பூ - கே.எஸ். மாதங்கன் - 11-07-1980
5. தூரத்து இடிமுழக்கம் - கே. விஜயன் - 05-12-1980
6. சட்டம் ஒரு இருட்டறை - எஸ்.ஏ. சந்திரசேகரன் - 14-02-1981
7. சிவப்பு மல்லி - ராமநாராயணன் - 15-08-1981 8. நெஞ்சில் துணிவிருந்தால் - எஸ்.ஏ. சந்திரசேகரன் - 29-08-1981 9. சாதிக்கொரு நீதி - எஸ்.சங்கரன் - 18-09-1981
10. நூலறுந்த பட்டம்
11. நீதி பிழைத்தது - சந்திரசேகர் - 28-11-1981
12. பார்வையின் மறுப்பக்கம் - கே.எம். பாலகிருஷ்ணன் - 19-02-1982
13. பட்டணத்து ராஜாக்கள் - எஸ்.ஏ. சந்திரசேகரன் - 05-03-1982
14. ஆட்டோ ராஜா - கே. விஜயன் - 27-03-1982
15. சிவந்த கண்கள் - ராமநாராயணன் - 07-05-1982
16. ஓம் சக்தி - எஸ்.ஏ. சந்திரசேகரன் - 21-05-1982
17. சட்டம் சிரிக்கிறது - ராமண்ணா - 02-07-1982
18. நான் சூடிய மலர் - சி.எஸ். கோவிந்தராசன் - 26-01-1983
19. கௌரி கல்யாணம் - விசு - 01-07-1983
20. சாட்சி - எஸ்.ஏ. சந்திரசேகரன் - 16-09-1983
21. மதுரை சூரன் - எம்.ஆர். விஜய்சந்தர் - 14-01-1984
22. மெட்ராஸ் வாத்தியார் - விஜயபாஸ்கர் - 14-01-1984
23. தீர்ப்பு என் கையில் - வி.பி. சுந்தர் - 10-02-1984
24. வெற்றி - எஸ்.ஏ. சந்திரசேக்ரன் - 17-02-1984
25. நூறாவது நாள் - மணிவண்ணன் - 23-02-1984
26. வேங்கையின் மைந்தன் - ராமநாராயணன் - 09-03-1984
27. குழந்தை ஏசு - வி.ராஜன் - 12-04-1984
28. வெள்ளை புறா ஒன்று - கங்கை அமரன் - 13-04-1984
29. நல்ல நாள் - ஆர். தியாகராஜன் - 01-06-1984
30. மாமன் மச்சான் - ராமநாராயணன் - 23-06-1984
31. வீட்டுக்கொரு கண்ணகி - எஸ்.ஏ. சந்திரசேகரன் - 01-07-1984
32. சபாஷ் - ராமநாராயணன் - 20-07-1984
33. நாளை உனது நாள் - ஏ. ஜகந்நாதன் - 07-09-1984
34. சத்தியம் நீயே - பி. மாதவன் - 21-09-1984
35. இது எங்க பூமி - கே. கர்ணன் - 28-09-1984
36. வைதேகி காத்திருந்தாள் - ஆர். சுந்தர்ராஜன் - 23-10-1984
37. குடும்பம் - எஸ்.ஏ. சந்திரசேகரன் - 22-11-1984
38. ஜனவரி 1 - மணிவண்ணன் - 06-12-1984
39. அலை ஓசை - சிறுமுகை ரவி - 14-01-1985
40. சந்தோஷக் கனவுகள் - ஆர்.சி. சக்தி - 01-02-1985



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actors/vijayakanth.html

பதிப்புரிமை © 2007 தமிழ்திரைஉலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (13-05-2007 முதல்)
t shirts




Google




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 தமிழ்திரைஉலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.