http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரை உலகம்





செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

     பார் போற்றும் பைந்தமிழ் நடிகர் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1927ம் வருடம் அக்டோபர் மாதம் 1ஆம் நாள் சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னையாப்பிள்ளை கணேசன் ஆகும்.

     சிவாஜி கணேசன் திரையுலகில் அறிமுகமாகும் முன் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அச்சமயம் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடத்தார். அந்நாடகத்தில் அவரது நடிப்புத்திறனைக் கண்ட தந்தைப் பெரியார் அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்து பாராட்டினார். அன்றிலிருந்து அதுவே அவரது பெயராகிவிட்டது.

     பராசக்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சிவாஜி கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும், 9 தெலுங்குப் படங்களிலும், 2 இந்திப் படங்களிலும், ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

     இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. கப்பலோட்டிய தமிழன் படத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையாக நடித்து அவரை நம் கண் முன் நிறுத்தியவர். பாசமலர், வசந்தமாளிகை, உயர்ந்த மனிதன், கௌரவம், தில்லானா மோகனாம்பாள், திருவருட்செல்வர், திருவிளையாடல், புதிய பறவை, தியாகம், திரிசூலம் போன்ற படங்கள் இவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தன.

     ஆரம்ப காலம் முதல் 1955 வரை சிவாஜி கணேசன் திராவிட இயக்கங்களில் ஆர்வம் கொண்டு விளங்கினார். 1961ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1987ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து திருமதி ஜானகி ராமச்சந்திரனின் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் அவரால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் படிப்படியாக அரசியலிலிருந்து விலகினார்.

     சிவாஜி கணேசன் அவர்கள் 2001 ஜூலை 21ல் இயற்கை எய்தினார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழா (கெய்ரோ 1960)- சிறந்த நடிகருக்கான விருது
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)

     1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actors/sivajiganesan.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs