http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரை உலகம்





அஜித் குமார்

     நடிகர் அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் ஹைதராபாத் நகரில் பிறந்தார். இவரின் அண்ணன் பெயர் அனில் தம்பி பெயர் அனுப் குமார். 1986 ஆம் ஆண்டு இவர் ஆசன் மெமோரியல் சீனியர் செகண்டர் பள்ளியிலிருந்து விலகி பகுதி நேர இரு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். பின்னார் 1990 வரை ஈரோட்டில் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் மாடலிங் வேலையும் செய்தார். ஒரு சமயம் இவர் மோட்டர் சைக்கிள் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதால் கால்கள் உணர்விழந்தன. ஆனால் இவர் விடாமுயற்சியுடன் அதிலிருந்து மீண்டு சென்னையிலுள்ள அவரின் வீட்டிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் வருடத்தில் அஜித் குமார்-நடிகை ஹீரா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் 1999 ஆம் வருடத்தின் முற்பகுதியில் முடிவுக்கு வந்தது. அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டுள்ளனர். அஜித் குமார் ஒரு சிறந்த மோட்டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற்றும் மலேசியாவில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

விருதுகள்

     அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார். 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.

அஜித் குமார் நடித்துள்ள படங்கள்

1. பிரேம புஸ்தகம் - (தெலுங்கு) - 1992 - பவன்
2. அமராவதி - (தமிழ்) - 1993 - ரமேஷ் குமார்
3. பாசமலர்கள் - (தமிழ்) (நட்புக்காக) - 1994 - ரமேஷ் குமார்
4. பவித்ரா - (தமிழ்) - 1994 - நிதின்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) (நட்புக்காக) -1995 - மன்மோகன்
6. யுவா ரக்தம் - (தெலுங்கு) (நட்புக்காக) - 1995 - மன்மோகன்
7. ஆசை - (தமிழ்) - 1995 - வசந்த்
8. ஆசா ஆசா ஆசா - (தெலுங்கு) - 1995 - வசந்த்
9. வான்மதி - (தமிழ்) - 1996 - அகத்தியன்
10. கல்லூரி வாசல் - (தமிழ்) - 1996 - பவித்ரன்
11. காலேஜ் கேட் - (தெலுங்கு) - 1996 - பவித்ரன்
12. மைனர் மாப்பிள்ளைகள் - (தமிழ்) (நட்புக்காக) - 1996 - ஏ. மனோகர்
13. காதல் கோட்டை - (தமிழ்) - 1996 - அகத்தியன்
14. நேசம் - (தமிழ்) - 1997 - நாராயண்
15. ராசி - (தமிழ்) - 1997 - முரளியப்பாஸ்
16. உல்லாசம் - (தமிழ்) - 1997 - ஜேடி-ஜெர்ரி
17. உல்லாசம் - (தெலுங்கு) - 1997 - ஜேடி-ஜெர்ரி
18. பகைவன் - (தமிழ்) - 1997 - டி. ராஜசேகர்
19. ரெட்டை ஜடை வயசு - (தமிழ்) - 1997 - சிவக்குமார்
20. காதம் மன்னன் - (தமிழ்) - 1998 - சரண்
21. அவள் வருவாளா - (தமிழ்) - 1998 - ராஜ் கபூர்
22. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - (தமிழ்) (நட்புக்காக)- 1998 - விக்ரமன்
23. உயிரோடு உயிராக - (தமிழ்) - 1998 - சுஷ்மா
24. தொடரும் - (தமிழ்) - 1999 - ரமேஷ் கண்ணா
25. உன்னைத் தேடி - (தமிழ்) - 1999 - சுந்தர் சி
26. பிரேமடோ பிலிசா - (தெலுங்கு) - 1999 - சுந்தர் சி
27. வாலி - (தமிழ்) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
28. வாலி - (தெலுங்கு) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
29. வாலி - (இந்தி) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
30. ஆனந்த பூங்காற்றே - (தமிழ்) - 1999 - ராஜ் கபூர்
31. நீ வருவாய் என - (தமிழ்) (நட்புக்காக) - 1999 - ராஜகுமாரன்
32. அமர்க்களம் - (தமிழ்) - 1999 - சரண்
33. அத்புதம் - (தெலுங்கு) - 1999 - சரண்
34. முகவரி - (தமிழ்) - 2000 - துரை
35. சிறுநாமா - (தெலுங்கு) - 2000 - துரை
36. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - (தமிழ்) - 2000 - ராஜீவ் மேனன்
37. பிரியுரலு பிலிச்சிண்டி - (தெலுங்கு) - 2000 - ராஜீவ் மேனன்
38. உன்னைக் கொடு என்னைத் தருவேன் - (தமிழ்) - 2000 - கவி காளிதாஸ்
39. தீனா - (தமிழ்) - 2001 - ஏ.ஆர். முருகதாஸ்
40. சிட்டிசன் - (தமிழ்) - 2001 - சரவண சுப்பையா



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/actors/ajithkumar.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs